தடை
சந்தேக முண்டாக்கி சந்தோசம் காண்கின்ற
சொந்தங்கள் எல்லாம் சுடும்கொள்ளி-பந்தங்கள்.
உள்ளம் அதில்பட்டு உற்றிடம் நேராமல்
வெள்ளமாய் நிற்க விரும்பு.
*உற்றிடம் -துன்பம்.
சிறுபான்மை மக்கள் சிதைந்தேங்கோ வாழ்ந்தும்
மறுமலர்ச்சிக் காய்மனு செய்த-அறப்போரை
மட்டுப் படுத்திடவே முன்னெச் சரிக்கைத்
திட்டமாய் வந்ததோ தடை!