+பொட்டல் காடு+
சேவலும் காணல
கூவலும் கேட்கல
கிராமமா நகரமா
ஒண்ணுமே புரியல
மாடையும் காணல
மக்களைப் பாக்கல
பூக்களோ தென்றலோ
எங்கயும் மோதல
வறண்டது பூமியோ
மறந்தது சாமியோ
உடஞ்சது நிலமெலாம்
உடச்சது யாரிங்கே
தினமுந்தான் பசிக்குது
மனமுந்தான் அழுகுது
பணமுந்தான் இல்லையே
படைச்சவன் எங்கேயோ
சிரிப்புனா என்னன்னு
சிரிச்சுத்தான் காட்டற
மழலையின் சிரிப்பிலே
பசிகொஞ்சம் போகுது
சீக்கிரம் மாறுமோ
வாழ்க்கையின் சிக்கலும்
என்றுதான் சிரிக்குமோ
விவசாய மக்களும்...!!!