தேவ ராகம்
மற்றவரோடு ஒவ்வாமல்
வரிசைபிழன்று
திணறும்...
சீருடைச் சிறுவனின்
தவறுகளில்
ஆசீர்வதிக்கப் படுகிறேன்...
இன்றைய
காலை பிரார்த்தனைக்
கூட்டுகளின் போது....!!!
*****************************************************************************
எந்தப் பூவை
சூடியதால்... எந்தப்
பூவிற்கு அழகு..?
சிறுபிள்ளை சடை முடிகளில்
இன்றும் புதியதாய்
மல்லிகையும்... செவ்வந்தியும்..
*****************************************************************************
நாத்திகர்களும்
ஆத்திகம் உணர்ந்து
கசிகிறார்கள்....!!
அவர்கள் மழலைகளோடு
பேசிச்
சிரித்திருக்கையில்...!!
****************************************************************************
தொலைக்காட்சி
வாரயிறுதி
அதிவெளிச்சங்களில்
அமிழ்த்தி..
விலங்கு பூட்டப்படுகிறது
கடவுள்களுக்கு....
இதைத்தான்...!
இப்படித்தானென்று.....!!