நான் உருவின்றி
ஓவென ஒப்பாரி சத்தம்
பட பட வென பறைசத்தம்
நல்ல சங்கீதமென அதை கேட்டு
உறங்கும்
உயிர்விட்ட உடலாய் நான் ..
என் இறப்பு சிலருக்கு சந்தோசம்
சிலருக்கு வருத்தம்..
இரண்டும் சமமாய் தந்த சவம் நான்.
என்ஜீவன் காற்றில் கலந்தது
கடம் மண்ணில் கரைந்தது .
நான்
உருவின்றி தொலைந்துபோனது..