எத்தனை பலிகள் இன்னும் தேவை
குழி மட்டும்தான்
தோண்ட தெரிந்த உனக்கு
மூடுவதற்கு ஏன் மறந்து போனதோ ......
நீருக்காக குழிதோண்டி
கண்ணீர் அல்லவா
வெகுமதி ஊற்றானது .......
பொழுதுபோக்காய் போனது உனக்கு
மனித உயிர்பலிகள்
இரக்கமற்ற மனிதா ......
விபரீதம் நடந்தால்தான்
விழித்துக்கொல்கிறாய் நீ
என்ன ஒரு வினோத அணுகுமுறை .......
ஆயிரம்தான் அனுபவங்கள்
பாடமாய் இருந்தும்
ஆட்சியார்கள் அலட்சியமாகவே ........
ஆயிரம் நிவாரணத்தை
அள்ளிகொடுத்த போதிலும்
போன உயிர் மீண்டுவருமா .....
பிள்ளையை பறிகொடுத்து புலம்புகின்ற தாய்க்கு
வார்த்தைகள் ஒன்றும்
மனம்தேற்றும் மருந்தல்ல .....
அடுத்தவர் வேதனை எல்லாம்
உனக்கென ஓர்நாள் வரும்போதுதான்
தெரியும் ......
விபத்தென்ற அலட்சியம்
இனியும் வேண்டாம்
விழிப்புடன் இருந்து வீண்பலி காப்போம் .......