ஏன்
மனைவியான காதலியே!
காதலிக்கும் போது
கடற்கரையில்
காத்திருக்க வைத்த நீ...
கல்யாணத்தின் போது
மணவறையில்
காத்திருக்க வைத்த நீ....
முதலிரவின் போது
தனியறையில்
காத்திருக்க வைத்த நீ...
வாழும் போது
படுக்கையறையில்
காத்திருக்க வைத்த நீ...
கல்லறையில் மட்டும்
என்னைக்
காத்திருக்க வைக்காமல்
நீ....
உடனே வந்தது ஏன் ?