நீயே என் காதல் கவிதை 02
நீயே என் காதல் கவிதை 02
-----------------------------------------
பூமியில்
பார்த்த அனைத்து
பொருட்களும் உன்
நினைவோடு பார்த்தேன்
அனைத்தும் அழகோ
அழகு ....!!!
சற்று தலை நிமிர்ந்து ....!!!
உன்னை நினைத்து ...
பார்த்தேன் வானத்தில் ...
வெண் முகில்...
தேவதையாய் - நீ ...
கண் சிமிட்டுகிறாய் ..
உன்னிடம் வரசொல்லி ...
நட்சத்திரமாய் ...!!!
பறந்து ..
திரியும் பறவையிடம் ...
உதவிகேட்டேன் என்னை ...
உன்னிடம் கொண்டு ...
சேர்க்கும் படி ...
அவை காதலை ....
லஞ்சமாக கேட்கின்றனவே ....???