தனிமைக்குள்

ஆருக்காக பிறந்தேன்
ஆரோடு உறவானேன்.
ஆரெவரையோ மணமுடித்தேன்
ஆரையெல்லாம் பெற்றெடுத்தேன்
ஆராருக்கோ மணமுடித்து வைத்தேன்
பேருரைக்க பேரன்மார்
பேந்துமேன் எமக்கு வாழ்வென
உறவான கணவன் இடைவயதில்
குடியும் கும்மாளமுமாய் வாழ்ந்து
விடை கொடுப்பு
முதுமையில் தனிமையில்
வாழ்வதுவே வினையானேன்
ஒருவருக்காய் உலைவைப்பு
ஒருவாய் சோறெடுத்து வைப்பதற்கே
முதுமையின் தனிமையில் வாழ்வு
செல்பேசியில் சுகம் விசாரிக்கும்
விசாலமான உறவுகள்....
தனிமைக்குள் இருட்டுக்குள்
இருப்பதுவே எனக்கு
இயலுவதாச்சு
சுருங்கிய உலகினுள்
சுகவிசாரிப்பற்ற
ஒடுங்கிய ஊருள்
பாரம்பரிய வீட்டுக்குள்
பார்த்திட தொலைக்காட்சி
பேசிட செல்பேசி...
பார்த்துப்
பேசிடப் பழகிட
கை கொடுத்திட
வருடிட, கொஞ்சி
அன்பாய் அரவணைக்க
துணையோ பிள்ளைகளோ
குஞ்சுகளோ அற்ற
தனிமைக்குள்
முதிர் விதவையாய் நான்....?

அழ.பகீரதன்

எழுதியவர் : அழ.பகீரதன் (15-Apr-14, 4:57 am)
சேர்த்தது : அழ.பகீரதன்
பார்வை : 115

மேலே