உன் இதயம் கல்லானதால் நான் இதயமில்லாதவன் 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே...
முதல் முறை
உன்னை பார்த்தேன்...
முழுவதும் என்னை
இழந்தேன்...
மறுமுறை உன்னை
பார்த்தேன்...
என் மனதையும்
தொலைத்தேன்...
தினந்தோறும்
உன்னை தொடர்ந்தேன்...
என் திசையை
மறந்தேன்...
சாலையோரம்
காத்திருந்தேன்...
சாக்கடையாய்
ஒதுங்கி சென்றாய்...
தினம் வழியோரம்
காத்திருந்தேன்...
என் வாழ்க்கையை
தொலைத்தேன்...
பூ கொடுக்க வந்தேன்
புருவம் உயர்த்தி பார்த்தாய்...
கடிதம் கொடுக்க வந்தேன்
கை நீட்டினாய்...
உன் அன்புக்காக
ஏங்கினேன்...
உன் அண்ணனை
விட்டு அடித்தாய்...
ஏரிக்கரையில்
ஏக்கத்துடன் நின்றேன்...
என்னை ஏறெடுத்து
பார்க்கவில்லை...
என் இதயத்தை கையில்
கொண்டு வந்தேன்...
என்னை இதயமில்லாதவன்
என்றாய்...
ஆம் உன் இதயம்
கல்லானதால்...
நான்
இதயமில்லதவன்தான் நான்.....