செவ்வாயில் குடியேறினால்

மலட்டு பூமி
மணக்காது சாமி
வளங்களற்ற
வறண்ட பாலை....
வாழ்விற்கினி ஆகாத வேலை ்
வளங்கள் சுரண்டி
வாழ்ந்த மக்கள்
வழிதேடி ஓடும் மாக்கள்
செவ்வாய் கிரகம்
சேர்ந்த மனிதன்
சாதி மதமும்
கைகொண்டே சென்றான்
சேட்டைகள் யாவும்
இனிதே புரிந்தான்
அடுக்கு மாடி வீடுகள் கட்டி
கான்கிரீட் காடுகள்
பற்பல செய்தான்
வனங்களை அழித்தே
வளம் பல கொண்டான்....
மாசு தூசு
நிறைவாய் கண்டான்
பிளாஸ்டிக் குப்பை
மலையாய் குவித்தான்
அணு உலை சமைத்தான்
ஆபத்தை விதைத்தான்
நீர்மட்டம் குறைத்தே
தம்பட்டம் அடித்தான்
மின்னணு பொருட்கள்
மிகையாய் செய்தான்
வெப்பமாதலை அங்கும் தொடர்ந்தான்
அரசியல் பகடை
அங்கும் உருட்டி
சகுனி வேலைகள்
திடம்பட முயன்றான்
ஊழல் முளைத்து
லஞ்சம் தழைத்து
கறுப்பு பணம்
காவடி எடுத்தாடியது....
கள்ளக்காதல் கட்டப்பஞ்சாயத்து
சாதி சங்கம்
வெட்டு குத்து
வழக்கு வாய்தா...
அனைத்தும் அங்கும்
இடம் மாறி .....
செவ்வாய் கிரகம் வறண்டு
அடுத்த கிரகம்
தேட நினைத்தான்
அற்ப மனிதன்
ஆறறிவு விலங்கு...

எழுதியவர் : சித்ரா ராஜ் (17-Apr-14, 9:55 pm)
பார்வை : 118

மேலே