புற்றுநோய் காதலன்-வித்யா

நான் மரித்துக் கொண்டில்லை
வாழ்ந்துகொடிருக்கின்றேன்........
நான் தோய்ந்து ஒளியிழந்து
போகவில்லை......
இன்னும் வலிமையாக
பிரகாசமாக ஒளிர்கிறேன்.....!

நான் அழவில்லை.....
பெரும்புன்னகை செய்திருப்பேன்
என் கண்ணீர் கால்களை நெருங்கும் வரையிலும்....!

என் கதை
வாழ்க்கை வரலாறு அல்ல
வலிகளின் வரலாறு.......!

கடலின் ஒருதுளி
நானல்ல..........
ஒரு துளி
கடல் தான் நான்.....!

கரிய நிழல்களால்
நிரப்பப்பட்டவள் நானல்ல........
ஆயிரமாயிரம் ஒளிவிளக்குகளால்
வடிக்கப்பட்டவள் நான்.............!

குரல்கொடுத்து வலிதாங்க
யாருமில்லாதவள் அல்ல நான்.......
எனக்கே எனக்கான
தேவ தூதுவள் நான்.....!

நான் இறந்த கால
ஒளியலைகளின் எதிர்கால
பிரதிபலிப்பல்ல......
நிகழ்கால ஓடையில்
நீந்திக்கொண்டிருக்கும்
அதிசய மீன்........!

தனித்து விடப்பட்டு
நிரகரிக்கப்பட்டவள் நானல்ல.........
பட்டு நூல்களின் அன்பு
அதிர்வலைகளில்
கோர்க்கப்படவள் நான்.......!

என்னை சாம்பலாக்க முடியாது
என் நம்பிக்கை என்னுள் ஒளிரும்வரை.....!




****************************************************************************
உலக புற்று நோயாளிகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

எழுதியவர் : வித்யா (19-Apr-14, 2:17 am)
பார்வை : 506

மேலே