பூக்கடைக் குப்பைகள் - மணியன்

விலை மகள்
நானும் ஓர் தாயின்
தலை மகள் . . . . . .

இரவினை விரித்து
பாயினில் பரணமைத்து
பாவியெங்கள் பசியாற
பாவி நீங்கள் எம்
இதயம் கிழித்து
இன்பம் என்று இளிக்கின்றீர் . . . . .

ராசாதி ராசரும்
ராவிலே பிச்சை கேட்டு
ரசனையோ ரசனையுடன்
ரண களப் படுத்திவிட்டு
ரம்மியமாய் எம் பாத்திரத்தில்
ரகசியப் பிச்சை அளிக்கின்றீர் . . . . . .

தூழியிலே கனவுறங்க
துன்பத்திலே நகைச்சிதற
நள்ளிரவுப் பூக்கள் எம்மை
நசுக்கிப் பார்த்து
நாசி நுகர்ந்தீர் . . . . . . .

நடுநிசி நாயகிகள்
நல்ல பெயர்
நயமுடன் அளித்தீர் . . . .

வாயினிலே சோறு வர
வாசலைத் திறந்து வைத்தோம்.
பாரினில் புழுவாக
பாயினில் துடிக்கின்றோம் . . . . . . .

விடுதலை விடுதலை
வீண் சம்பம் பேசுவோரே !
அருவறுப்பான தொழில் எமக்கு
அமைத்துக் கொடுத்தது யார் ? .

பொன்னோடு பொருள் பெற்று
பெண்மையினை இழுத்து வந்து
பொல்லாத உறவில் தள்ளும்
போக்கற்ற உங்களிடம்
போதனைகள் சொல்லுவதால்
போதிமரமும் பொசுங்கிடுமே . . . . . . .

படைத்தவனும் படுத்தவனும்
பாராமுகமாய் இருப்பதனால்
பாவி நான்
பாழுங கிணற்றில்
புழுப்பூவாய் பிறவி கண்டு
பூக்கள் நான் சருகானேன். . . . . .

விருப்ப ஓய்வு பெற
வேண்டாம் என்றா நினைக்கின்றேன் . . .
ஒவ்வொரு இரவும்
ஒட்டிக் கொள்ளும்
ஒப்பதல் இல்லா நிலையைப் போக்கி
ஓய்வு பெற ந்னைக்கின்றேன்.
ஓய்வூதியம் எமக்கும் உண்டா ? . ! . ? . ! !,



*-*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (19-Apr-14, 8:11 am)
பார்வை : 140

மேலே