இதயக்காதல்

ஏங்க
5 மணி ஆவுது
எழுந்துருங்க

என்னங்க.... எழுந்துருங்கங்க....
எழுந்துருங்கங்க...

போய் பாலை வாங்கிட்டு
வீட்டை சுத்தம் பண்ணி
பாத்திரம் கழுவி
உலையில் அரிசி போட்டு
தோசை சுட்டு
பதார்த்தம் செய்து
பிள்ளைகளை ஸ்கூல் லே விட்டு
துணி துவைத்து
சாமான் வாங்கி
சமையல் செய்து


ஐயோ ஐயோ !
வாய் வலிக்கலையா ?

நேரம் இருந்தா
நீங்களும்
கொஞ்சம் சாபிட்டுருங்க ..

என்னங்க !

நீங்க இல்லாமல்
நாங்க எப்படிங்க ?

கனவிலிருந்து சிலிர்த்து
எழுந்தான் கணவன் ...

தாலி என்ற
பாச கயிற்றிற்கு

இத்தனை சுமைகளா ?


கனவிலயே தாங்கவில்லை
உண்மையாகவே மனைவி என்பவள்

நம் ஒவ்வொருவரின் இதயம்

இதயத்தை காதல் செய்வோம் .......

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (20-Apr-14, 11:04 am)
பார்வை : 127

மேலே