வேண்டாதன

அன்னை தந்தை அறிவுரையை மறக்கவேண்டாம்
ஆசானைத்தரம்தாழ்த்தி பழிக்கவேண்டாம்
இடுக்கண்தரும் செயல்களிலே இறங்கவேண்டாம்
ஈனபுத்தி மறந்தும் நம்மில் கலக்கவேண்டாம்
உன் உறவே வெறுக்கும்படி நடக்கவேண்டாம்
ஊர் தூற்றும் நபராக இருக்கவேண்டாம்
எவர்மீதும் குறைகள்சொல்லி பழகவேண்டாம்
ஏற்றுக்கொண்ட துணையைவிட்டு விலகவேண்டாம்
ஒருவனுக்குஒருத்தி நீதி மறக்கவேண்டாம்
ஓரணுவும் தீங்கிழைக்க நினைக்கவேண்டாம்
ஒளசித்தியம் மீறி ஆசை கொள்ளவேண்டாம்