முத்தத் தேன்

சொப்பனத்தில் அற்புத மாய்
==சொலிக்கின்ற பெண்ணே உன்
சிப்பிமுத்து முத்தங்களின்
==தேன்சுவையை அனுபவிக்க !
முப்பாலை நான் குடித்து
==முத்தமிழைத் தான் படித்து
தப்புகளே இல்லா ஒரு
==தமிழ் கவிதை வடித்தேனடி !

கள்சுவையை உன் உதட்டில்
==கண்டெடுத்த நாள் முதலாய்
உள்நெஞ்சில் ஏதேதோ
==செய்யுதடி பொற்கிளியே
முள்ளிருக்கும் ரோஜாவை
==வண்டுகள் மொய்ப்ப தெல்லாம்
உள்ளிருக்கும் உன் இதழின்
==முத்தத்தேன் சுவைக்கத் தானே !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (22-Apr-14, 5:07 pm)
Tanglish : muthath then
பார்வை : 97

மேலே