சின்னத் திரி விளக்கு - நரியனுர் ரங்கு

சூறைப் பெருங்காத்து
சுத்தி சுத்தி மையிருட்டு
சின்னத் திரி விளக்கே - உன்னை
என்ன சொல்லி ஏற்றிவைப்பேன்

அணையாப் பெரு நெருப்பு
அல்லாடும் மூங்கவனம்
அன்னக்கிளி அழகு - அது
என்ன நடை நடக்கும்

காத்து மழைக் காலம்
கருங்குயிலு அல்லோலம்
கானகத்துப் பூங்கொடியே - உன்னை
காப்பது நான் எக்காலம்

மின்னல் இடி காலம்
முன்னிருட்டு இராக்காலம்
மின்னி வரும் சிறுப்பூச்சே - உன்னை
மீட்பது நான் எக்காலம்

நரியனுர் ரங்கு - செல் : 94420 90468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (23-Apr-14, 5:22 pm)
பார்வை : 70

மேலே