தேடி வா
உருவம் தெரியாமல் உலகிற்கு வரும் முன்னே எனக்காக பிறந்து,
என் இமைகளிலிருந்து மறைந்து பல ஆண்டுகள் வாழ்ந்து,
காற்றளைகளோடு மட்டும் என் மொழியறிந்து,
நினைவலைகளோடு மட்டும் என் உருவம் தேடி,
தனிமையில் இருக்கும் என்னுயிரே!!!
இரண்டு உடல்! இரண்டு உயிர்! என்னும் தவம் விடுத்து,
இரண்டு உடல்! ஓர் உயிர்! என்னும் விரதம் ஏற்று,
என்னுயிரே!!!
உன்னுயிர் தேடி வா!!!
உடலிலும், உள்ளிருந்து ஓடும் உயிராக! உன்னையே தேடுகிறேன்!!!
என்னுயிரே!
உன்னுயிர் நோகாமல், என்னுயிராய் நீ வந்துவிடு!
என்னுயிர் நோகாமல், என்னை உன்னுயிராக்கிவிடு!
தேடுகிறேன், உன்னையே!!! என்னுயிரே!!!