தீரா வியாதியில் இருப்பவர்களே
கட்சித் தலைவனின் சிலை
உடைக்கப்பட்டதற்க்காய்
கட்சிக்காரர்கள் நாங்களும்
தீவிரவாதிகளாய் மாறுவோம்
என்று சொன்ன
அரசியல் பதர்களே
என் இனம் தாலி அறுக்கப்பட்டாள்
அவள் ஆடை களையப்பட்டாள்
அவமானம் அடைந்தாள்
அசிங்கம் பன்னப்பட்டாள்
அடையாளத்தை தொலைத்தாள்
முட்டி மோதியவளை
கட்டி வைத்து வெட்டினார்கள்
இதற்காய் போராடியவர்களை
தீவிரவாதிகள் என்றீர்களே
நீங்கள் தான் ஏதோ
தீரா வியாதியில் இருக்கிறீர்கள் ....!
உங்களை எல்லாம்
அறுத்து தான் சிகிச்சையை
மனுகுலத்திற்க்கு தரவேண்டும் ....