கம்பா நதி காமாட்சி திருவந்தாதி தொடர்ச்சி -4

5)
கொடிமலர்ந்த்த பூக்கள் கொடுத்த
மதுவில் சுழ்ளும்பொன்
வடிவண்டு சத்தத்தில் வந்து
மலரும் சரக்கொன்றையும்!
விடியல் விரிக்கும் வெளிச்சம்
கலையும் கருப்பிருளும்,
அடியேனின் ஆவி புகுந்திட்ட
நல்லற நாயகியே!
6)
நாயகி நின்னருள் கேட்பதும்.
நற்கதி வந்த்தடைய ,
சேயாம் எனக்கு அரணாகி
செய்யும் கருணையினால்
நாயாம் பிறப்பு அறுத்து .
நலிவினை ஓட்டிவைப்பாய்,
தாயாம் உனையன்றி,யார் உளர் /
தேன்மலர் சென்னியாளே !
7)
சென்னியாள் சீர்வதனம் செப்பும்
நிலவாய் துலங்கிடும்,
கன்னங்கரிய குழலோ
கருமுகில் ஈர்த்துவரும்,
அன்னாள் அளவடி ஆனந்த்தக்
கும்மி யடித்துவரும் ,
நன்றாய் நலமது நல்கும்
மலர்க்குழல் மாதமையே !

8)
மாதாள் மலரடி மாய்க்கும்
மனவிருள் , நெல்லைஅப்பன்
கோதை கொலுவிருக்கும் நெஞ்சத்தில்
துஞ்சா அகப்பேயிம்,
வேதை விலகும் .விசாலாட்சி
காட்டும் கருணையினால் ,
பாதை விரித்திடும் பாலாம்
பிகையின் பரிந்துணையே!

எழுதியவர் : ந.ஜெயபாலன். திருநெல்வேலி ந (3-May-14, 5:49 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 69

மேலே