பிச்சை நன்றே பிச்சை நன்றே

பிச்சை நன்றே... பிச்சை நன்றே...
==============================

"சுவடில்லாமல் ஒழிப்போம்
கொசுக்களைப் போல் பரவிவிட்ட
கொடுமையான இலஞ்சத்தை"
கூட்டம் கூட்டி மேடை ஏறி
வாய் கிழிய பேச்சுக்கள்
பின்புறம் கையேந்தியபடி!!!

இலையரிக்கும் கம்பளிப் புழுவாய்
நாட்டை உண்ணும் கையூட்டு
நாவினால் ஒழிக்கப்படுகிறது
கரம் மட்டும் வானம்பார்த்து!!!

முந்தானை கை நீட்டாதாம்
முகவராய் முடிச்சி போட்டவன்....
புதுவிதமாய் உத்திகளாம்
முகவர் கொண்டு வசூல் கனக்க!!!

வங்கி பெயர், வங்கி கணக்கு
சொல்லி வைத்தும் எழுதி தந்தும்
கைதொடா கையூட்டு
நேரடியாய் வங்கியிலே வரவாகி!!!

கைரேகை பதிக்காமல்
வசூலாகும் கையூட்டு
பெறுபவன்(ள்) நவீன உத்திகளில்
கொடுப்பவனோ முச்சந்திகளில்!!!

உருப்படுமா கையூட்டுக் குடும்பம்
அடுத்தவனின் உழைப்பைப் பிடுங்கி
உழைப்பின்றி வந்த பொருளும்
நோய் வந்து அள்ளிப்போகும்!!!

நேர்மை கொன்று வாழ்பவரை
காலம் நின்று நாளை கொல்லும்
உழைப்பினிலே பொருள் சேர்த்து
வாழ்ந்திடுவாய் கண்ணியம் காத்து!!!

எழுதியவர் : சொ.சாந்தி (10-May-14, 8:49 am)
பார்வை : 275

மேலே