வைகை தேசம்

சென் மாநகரிலே செவ்வான் பொழுதிலே
ஓய்வாக சிறுநேரம் தனியான போது....
வெள்ளி வேர் மின்னலாய்
வான் வந்து மறைந்த போது...
வானவர் இடி முழக்கம்
செவி வந்து சேர்ந்த போது ...
மண்வாசம் மெல்ல மெல்ல
சுவாசம் வந்து நிறைத்த போது ...
வெண் மேக கூட்டம் எல்லாம்
கருமேகம் ஆனபோது ...
மழை மேக சாரல் என்னை
துளி கொண்டு நனைத்த போது .....
விழியன் துளியாக நினைவிற்கு
வந்தது வறண்டு வாடும்
என் வைகை தேசம் !

எழுதியவர் : கெளதம் காந்தி (11-May-14, 5:49 pm)
Tanglish : vaikai dhesam
பார்வை : 611

மேலே