வெயிட்டாகிப் போன லைட்டு
அவனை EdiSON என்றாலும் EdiSUN என்றாலும் ஒன்றுதான்,
ஒரு தாய்க்கு தனயனும்,
முழுத்தரைக்குமே ஒரு இரவுச்சூரியன் என்பதால்,
இரவைப் பாழாக்கி இரவைப்பகலாக்கியவன் எடிஸன்,
வெளிச்சம் அவனின் மிச்சம்,
எடிஸன் போட்ட வெளிச்சம் முகத்தில் பட,
பாரதி அச்சமில்லை எனப்பாடினான்,
இங்கு கூரையில் வெளவாலாய் தொங்கும் மின்குமிழ்,
ஒரு குத்துச்சண்டைக்காரனின் கை போல் கணக்கின்றது,
ஒரே Weight,
Lightக்கு பதிலாக!