அழுதிடவா அடங்கிடவா
"அழுதிடவா... அடங்கிடவா"
அன்பு தீபமே,
சுடர்விட்டு ஒளியாய்
எனைப் பிரகாசிக்க
வைக்கும் உமது
பிரியம்,
எனது எல்லாப்
பொழுதுகளையும்
மென்மையாக
உயிர்ப்பிக்கின்றது....
பிரிவுகள் நிரந்தரமாக்கின எமது
வலிகளை....
இரவுகள் நீண்டு
இதயத்தை
இரக்கமில்லாமல்
தின்று தீர்த்தன...
புரிந்தது .....
மரணம் என்பது
உயிர் பிரிந்தால்
மட்டும் அல்ல ....
உனைப் பிரிந்தாலும் தான்...
காதலுக்கு இவ்வளவு
வலி
இருக்குமென்றால் ...
கருவிலேயே
நான் கரைந்திடவும்
சம்மதித்திருப்பேன்.
நான் விலகித் தான் இருக்கின்றேன்
ஆனால்,,,,,,,
என் இதயம் உன்னைத்
தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தொடர் மௌனமாய் நீ,
தொடர் சோகத்தில் நான்...
ஆணவமாய் நீ
அடம் பிடிக்கும் என் மனது..
காலச்சுழற்சியில் நீ தூரமாய் மிளிர்கின்றாய்..
கிணற்றுக்குள் தத்தளிக்கும் தவளையாய்,
எனது எதிர்பார்ப்புக்களும்
ஏக்கங்களும்
என்னையும் மூழ்கடிக்க இழுக்கின்றன..
எனது காத்திருப்பு வேதனையை
அதிகரிக்குமா...?
வெண்ணிலவாய் மகிழ்விக்க
எமை வந்து சேருமா....
ஆயிரமாயிரம் வினாக்களுடன் நான்..
காத்திருக்கின்றேன்..
என் குளத்தில் வரும் முழுமதிக்காக...
......********************............
பெ.மகேஸ்வரி