அவளைக் காணவில்லை Mano Red

செல்லும் பயணம் முழுதும்
செல்லரித்த அவளின்
செல்லமான நினைவுகள்,
பயணம் முடியும் முன்பே
அவளை காணவில்லை..!

அவளுடன் வரும்போது
நிழலை நான் மதிக்கவில்லை,
நிழல் என்னை பழி தீர்க்க
நிமிர்ந்து இப்போது சிரிக்கிறது
அவளைக் காணவில்லை...!!

மணிக்கொரு முறை அல்ல
மணித்துளிக்கு ஒருமுறை
உப்புக் கண்ணீரை
உதிர்த்து நிற்கிறேன்
அவளைக் காணவில்லை.!!

கடந்த காலத்தின்
தோல் உரித்து நிற்க
பாம்பு அல்ல என் மனம்,
நினைவில் விசமேற்றிய
அவளைக் காணவில்லை...!!

சூடு சொரணை அற்ற
மானம் கெட்ட மனசு,
பிடித்த பாடல்களுடன்
அவள் குரலும் கேட்கிறது,
அவளைக் காணவில்லை...!!

அவளைக் காணவில்லை
அவளின் பிரிவும் உண்மைதான்
அதற்காக அழுகையை
ஒரு வாரத்திற்கு மேல்
நீட்டிக்க முடியாது...!!

அதற்கும் மேல்
எனக்கும் நடிக்க தெரியாது..!!

எழுதியவர் : மனோ ரெட் (15-May-14, 9:25 am)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 131

மேலே