காதல்
எட்டிநின்ற நீ என்னுள் வந்தது
எப்போது?
தூரத்தில் சென்ற நீ திரும்பி வந்தது
எப்போது?
துன்பம் மட்டுமே தந்துவந்த நீ
என் இன்பமானது எப்போது?
உன்னை கல்லாக நினைத்திருந்தேன்
ஆனால்,நீ என் பிம்பத்தைக்காட்டும்
கண்ணாடியானது எப்போது?
விடை தெரிய கேள்விகளுக்கு
நீ சொல்லப்போவது எப்போது?
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
என்னைக்காண நீ வரப்போவது
எப்போது?