தமிழகத்தின் தலையெழுத்து
" தமிழகத்தின் தலையெழுத்து?... "
ஒட்டுமொத்த இந்தியாவும்
ஒத்துப்போய் நிக்குது!
தமிழகம் தன்பாட்டுக்கு
தனிவழியில் நடக்குது!
ஒட்டுமொத்தமாய் சாய்ந்தே
ஒன்றாய் ஒதுங்கி கிடக்குது - இனி
ஒன்றுமில்லை ஒன்றுமேயில்லை!
இவர்கள்பாடு தனிப்பாடு!
மத்திய அரசு உதவிடுமோ? - அது
விரும்பி உதவ வந்திடுமோ?
மாநில அரசும் விட்டிடுமோ? - இதை
ஊரு சனந்தான் அறிந்திடுமோ?
குடிகார குடிமகன்கள்
குடித்து ஆட்டம் போட்டீர்கள்! - இனியும்
உங்கள் காட்டில் மழைதான்!
உழுந்து பிரண்டு குடியுங்கள்!
இலவச பிச்சைகள்
இனியும் தொடருமோ? - மேலும்
இழிசொற்கள் வளருமோ!
இது என்று மாறுமோ?
ஒரு பலனும்
எதிர்பார்பதற்கு உண்டோ!
ஒரு நன்மையும்
வருவதற்கு உண்டோ!
ஏதேனும் நல்லது
செய்வார்களா? செய்வார்களா?
என்னதான் நடக்கும்
பார்ப்போம் பார்ப்போம்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
