மூதூர் தோப்பூர் மக்களின் மாறாத நினைவு
என் சொந்த மண்ணில் சொரிந்த கண்ணீர் மழை....
சொந்த மண்ணை இழந்து
சோகக்கண்ணீர் நணைந்து
துடிதுடியாக அழுது நின்றோம்.
சொத்துக்கள் அத்தனையும் -இழந்து விட்டோம்.
துடிக்கும் குழந்தையை கைப்பிடித்தோம்.
உணவும் நீரும் இல்லாமல்
ஓருவனை மனதில் நினைத்துக் கொண்டோம்.
மூதூர் தோப்பூர் அவல நிலை!
மீண்டும் நமக்கு வருவதில்லை
நட்டைக் காத்து உதவி செய்ய
வல்ல நாயனே! அருல் மழை -நீ சொரிவாயே!
சுத்திச் சுத்தி கினாந்தி மலையில் - வைத்து
கை கட்டி கழுத்தை வெட்டியெறிந்து
கண்ணீரை மழைபோல் நாம் சொரிந்தோம்.
கால் நடையாக நடந்து வந்தோம்.
சில்லென்று வெடித்து தீக்கிரையாக - எரிந்து விட்டோம் எரிந்தவர் தம்மை எடுத்து அடக்க
எம்மிடம் சக்தி இழந்து விட்டோம்.
கந்தலாய் மண் தேடி!
கால் நடையாய் - காணகம்
நடந்து வரும் வேலை
மயக்கமுற்று மண்ணில் விழுந்த - மக்களை
நாங்கள் எடுத்துக்கொண்டோம்.
மெளலவி உலமாக்கள் அனைவரும்
மகிமை ஜியஸ் மார் உதவியுடன்
அனைத்து முஸ்லீம்களையும் - ஆதரித்து
கண்ணீரை துடைத்து - கந்தளாய்
மண் மீது அமரவைத்தார்கள்...
சமைத்த உணவும் தண்ணீரும் - சகல
உதவியும் அவர்கள் செய்து
சாதனை புரிந்து விட்டார்.
எம்மை அவர்கள் நெஞ்சோடு! அணைத்துக்கொண்டார்..............
தோப்பூர் மூதூர் அகதிகல்.......