உலக அழகிற்கெலாம் ஆதி நீ , உலக அழகினில் பாதி நீ

என்னை சுற்றி அத்தனையும் அழகாய்
இருந்தும் அழுது வடிகிறேன் ஏனோ ??

துணையாய் நீயின்றி, நான் மட்டும்
தனியாய் ரசிப்பதனால் தானோ ??


என,கேள்வியாய் எனை கேட்டு
பதிப்பனுப்பிய என் உயிரின் மதிப்பே !

கேள்வியாய் கேட்டதனால்
பதில் இதோ.......

அடக்கடவுளே !!

முதுமையின் மிகுதியால் நரைத்து விடும்
தலை முடியினை போல
அழகின் மிகுதி நின் அறிவினை லேசாய்
மறைத்து விட்டது போலும் ...

உன்னை சுற்றி உள்ள அனைத்தும்
அழகாய் இருப்பதாய் அங்கலாய்த்துக்கொள்ளும்
தங்கத்திலான அங்கம அமைந்தவளே

உனை சுற்றி அழகாய் இருப்பதாய் அடிக்கோடிட்ட
அத்தனை இத்தாதிகளையும்
தத்தம் தன்னிலை விளக்கம் கோரி
மணிக்கனக்கினில் தனித்தனியே
நான் நடத்திய நேர்க்காணல் அறிவாயா ??

இதோ ..

அழகினை அள்ளி அள்ளி அப்பிய
அல்லி அவள்தம் கொள்ளை எழில்கொண்ட
அற்புத ரசிப்பினாலன்றோ
நாங்கள் அத்தனைப்பேரும்
அழகழகாய் அவதரித்திருக்கின்றோம் !!

எழுதியவர் : (24-May-14, 4:57 pm)
பார்வை : 81

மேலே