நிழற்படம்

காத்திருந்த நேரத்திலே
கவிதையொன்று எழுதி வைத்தேன்!
கனவுகளை விழியிலேந்தி
காகிதத்தில் கிறுக்கி வைத்தேன்!

ஏக்கங்கள் எனில் சுரக்க
எரிமலையாய் மனம் கொதிக்க
கன்னி உன்னை எதிர்பார்த்து
கனவுகளில் மிதந்திருந்தேன்!

தென்றல் சுட்டதடி!
தேனிசைகள் மறந்ததடி!
தெருவோர விளக்கினின்று
நிழல்கள் விழுந்ததடி!

குயிலின் கீதம் கேட்குதடி-
குளிர்ந்து மனமும் உருகுதடி-
தேவதை உனைக் கண்டவுடன்
கவிதைகள் நெஞ்சில் உதித்ததடி!

கன்னி உன்னைக் கண்ட பின்னும்
கவிதைகளை எழுதுகின்றேன்-
நிஜத்தினை அருகில் வைத்து
நிழற்படம் எடுக்கின்றேன்!

03.02.1995

எழுதியவர் : மனோ & மனோ (26-May-14, 5:00 pm)
பார்வை : 88

மேலே