+குளு குளு கோடை காத்து+
கோடையில்
மதிய வேளையில்
குடும்பத்துடன்
ஒரு பேருந்து பயணம்!
ஒரு பண்பலை இல்லை
இன்பம் தரும்
எந்த பாடலும் இல்லை
குளிர் சாதனமும் இல்லை
இருந்தும் இனித்தது பயணம்
சாளரத்தின் காற்று வந்து
தாளங்கள் இசைக்க
கோடையிலும் பயணம்
எவ்வளவு இன்பமென்று
மனைவிடம் சொல்லிவந்தேன்...
அதற்கு
வெளியிலிருந்து அடிக்கும் காற்றும்
ஒரு காரணமாயிருந்தாலும்
உரத்த பேசாத அலைபேசி மனிதன்
கத்தி சண்டையிடாத குடும்பங்கள்
தேவையின்றி கதைக்காத கல்லூரி நண்பர்கள்
மற்றும்
ஆங்காங்கே தென்பட்ட நளினமான முகங்களும் காரணமே
என்பதை நான்
எனக்குள்ளே சிந்தித்தவாரே
சகபயணிகளுக்கு மனதில் நன்றி கூறினேன்...!!!