காதல் கைக்குட்டை

கைக்குட்டையை எடுத்தேன் மடிப்பதற்கு உடன்
சட்டென்று கீழே திரும்ப வைத்தேன் என்னை அதுகூட பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்ததற்கு

சட்டையை முதலில் அணிந்தால் தானே என்னை மடித்து வைக்க பாக்கெட்டு இருக்கும் என்ன மறு
படியும் குழப்பமா என்ன விசேஷம் என்று கேட்டது

ஒன்றும் இல்லை வாயை மூடு என்று அதட்டி
நன்றாக சட்டை பட்டன் போட முயன்றதில்
ஒன்றாக என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தன

நல்ல காலத்திலேயே தப்பு தப்பாய் போடுவாய்
மெல்ல சட்டையை உள்ளே வெளியே திருப்பி ஒழுங்காய் போடு என்று ஏளனம் செய்தன

எது போட்டாலும் போடா விட்டாலும் முதலில்
எடுத்து பாண்ட்டை போடா விட்டால் அவமானம்
அதை முதலில் செய் என்று அர்ச்சனை செய்தது

காதல் வயப்பட்டு என்ன அனுபவம் வாய்க்குமோ
சாதல் வரை என்ன சுகம் கிடைக்குமோ தெரியாது
சொந்த துணிமணிகளின் கலாட்டா ஜாக்கிரதை

எழுதியவர் : கார்முகில் (28-May-14, 9:09 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : kaadhal kaikuttai
பார்வை : 254

மேலே