காதல் வாழ்ந்திட
![](https://eluthu.com/images/loading.gif)
உனைக் கண்டு
மறைந்திட நினைத்தேன்
முன் நின்றாய்!
கண்ணுக்குள் அழகாய்!
சொல் கேட்டு
மூடிட நினைத்தேன்!
ரீங்காரம் செய் வண்டாய்!
செவிக்குள் இனிமையாய்!
செடிகளை நாடி!
மலரதைத் தேடினேன்!
நீயே மலரானாய்!
நறு மணம் தந்தாய்!
மறக்க நினைத்து
படுக்கையில் விழுந்தேன்
கனவில் வந்தாய்!
கலவரம் செய்தாய்!
யாரோ அழைத்தால்
துள்ளி எழுவேன்
ஏமாற்றமாய்
மீண்டும் வீழ்வேன்!
இந்நிலை எதுவரை
எந்நிலை வரும்வரை
பித்தனாய்
அலையும் வரையா?
வென்றிட மகிழ்ந்திட
நிலைக்குமா?
சொல்வாய்!
துணிந்து வருவாய்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காதலில் வீழ்ந்தவர்
வீழ்ந்திடார்!
சரித்திரம் படைத்திட
எழுவார்! சத்தியாய்!
தோற்றவர் நிலைத்தார்
மனதில்!
வென்றவர் நிலைப்பார்
வாழ்வில்!
நிலைத்திட வேண்டும்
வாழ்வில்!
காதல் ஜெயித்திட
துணிவோம் பாரில்!
ஐம்பொறிகளை
அடக்கிடும் காதலை
கொண்டவர் வென்றிட
துணை புரிவோம்!