பறத்தல் நிமித்தம்........!!!!!
மண்ணில் உதிர்ந்து கிடந்த
இறகு ஒன்று
மெல்ல காற்றில் மேலே
ஏறுகிறது
உதிர்ந்து
எந்த பாதையில் வந்ததோ
அதே பாதையில்
அசைந்து அசைந்து மேலெழும்பி
தனுக்கு சொந்தமான சிறகில்
லாவகமாய் பொருத்திக்கொண்டது
இப்பொழுது
பறத்தலில் சற்று வேகம்
கூடியிருந்தது அந்த பறவையிடம்...............!!!!!!!