விழிகள்

கருவண்டு விழிகள் கொண்டு
இதையக்கனி உன்ன வந்தாயோ
இல்லை என்
இதையத்தில் துளையிட வந்தாயோ
நீ வந்து போனதில்
உண்டான வடு ஆறாதே
உன் மேல் நான் கொண்ட
காதல் மோகும் மாறாதே
உன்னால் உண்டான சோகம்
மது உண்டாலும் திராதே
பெண்ணே
காதலை பிரித்து எறிந்த பொது
நான் பகுத்தறிய மறந்தேனோ
உன்னை நினைக்க மறப்பேனோ - இல்லை
மறதி பாடத்தை கற்பேனோ ..
மறந்தால் இருப்பேனா – இல்லை
இறப்பேனா …….