களைந்து போன கனவுகள்.
காத்திருந்தேன் காத்திருந்தேன்
உன் கருவறையில்
பத்து மாத காலம் கனவுகள்
காண காத்திருந்தேன்,
என் ஸ்பரிசத்தால் உன்னை
மகிழ்விக்க காத்திருந்தேன்,
உன் இதயத்தை வருடி
பசியாற காத்திருந்தேன்
என் இதயத்தை கசக்கி
வெளியே எடுப்பதற்கு
எப்படி சம்மதித்தாய் தாயே????