பிரதோஷம்

ஆலகால விஷம் தான் அருந்தி
அமிர்தம் தனை காத்த சிவம்

அம்பிகையை உடன் அமர்த்தி
அகிலம் எல்லாம் காக்கும் சிவம்

அன்பு எனும் உருவம் கொண்டு
அனைத்து உயிரிலும் கலந்த சிவம்

அருவமாக இருக்கும் போதும்
அபிஷேகம் மிக பிரியமான சிவம்

ஆணும் பெண்ணும் சரிபாதி என
அவணி எல்லாம் காட்டும் சிவம்

அடுத்த ஜென்ம தொல்லை மாற
அனைத்து நம்மை ஏற்கும் சிவம்

அற்புதங்கள் மனித வாழ்வில்
அமைத்து வழி நடத்தும் சிவம்

அனுசரித்து அடியாரின் குற்றம்
அனைத்தும் பொறுக்கும் சிவம்

அணுவின் உள்ளும் இருந்து
அதை ஆட்டுவிக்கும் சிவம்

அனைத்து உயிர்க்கும் வாஞ்சையுடன்
அன்னமிட்டு ஆதரிக்கும் ஆதி சிவம்

அந்த அற்புத சிவ தத்துவத்தின்
அருகில் அணுக பிரதோஷம்

அருள் மிகுந்த நந்தி தனை நாம்
அனைவரும் பூஜிக்க பிரதோஷம்

ஆதி சிவனின் தாள் அடிபணிந்து
அருள் பெற்று வாழ பிரதோஷம்

எழுதியவர் : கார்முகில் (24-Jun-14, 5:28 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 498

மேலே