கண்ணதாசன்
இன்று கண்ணதாசன் பிறந்தநாள்.நான் தமிழில் கவிதை எழுத இவரும் ஒரு காரணம்.இவர் பாடல்கள் சொல்லாத உணர்வுகள் கிடையாது.இவர் தமிழை ரசிக்காத தமிழன் கிடையாது..இந்த கவி கவியரசருக்கு சமர்ப்பணம்..
பாடல்கள் எழுதினாய் பல மனங்களை பறித்தாய்..
புத்தகங்கள் எழுதினாய் புது அறிவு தந்தாய்..
கவிதைகள் எழுதினாய் கவியரசன் ஆனாய்..
காலம் உன்னை வென்று இருக்கலாம்..
ஆனால் உன் காவிய வரிகளை வெல்ல முடியாது..
நீ நிரந்தரமானவன் அழிவது இல்லை..
எந்த நிலையிலும் உனக்கு மரணம் இல்லை..