என் உள்ளுக்குள்ளே இருப்பது என்ன தெரியுமா

என் உள்ளுக்குள்ளே இருப்பது
என்ன தெரியுமா?
உயிருக்குள்ளே நான் உருகுவது
உனக்கு புரியுமா?
நெஞ்சுக்குள்ளே நீ வந்த நேரம்
என் நிம்மதி சென்றது தொலை தூரம்
கண்ணை சுற்றி கரு வளையங்கள்
என்னை சுற்றி உன் உருவங்கள்
மருகி, உருகி நான் தவிக்கையிலே
நெருங்கி, நெருங்கி வந்து பின்
தள்ளி, தள்ளி நீ போவது ஏனோ?
நிழலாய் தோன்றி, பின் நிஜமாய்
மாறி, கனவை கலைத்து,
கண்ணீரை கொடுத்து
எதனாலோ? எரியும் தீயில்
என்னை வாட்டி எடுப்பது உனக்கு
சுகம் தானோ?
இருந்து கொல்லாதே எந்தன்
நினைவிலே, மறைந்து
வெல்லாதே எந்தன் மனதையே
வாழ விடு உன்னுடன், இல்லை
என்னை சாகவிடு போகின்றேன்
மண்ணுடன்