இனியொரு சதி செய்யாதீர்
விண்ணை முட்டும் கட்டிடம்
வியந்து பார்க்க வைத்திடும்
கல்லையும் மண்ணையும்
கம்பியும் கலந்து
கட்டிய கட்டிடம்
வேலைக்காக வெளிமாநிலத்திலிருந்து
நம்பி வந்த ஏழைகள்
ஒரே நாள் மழை தான்
செய்த சதியா
ஏரி இருந்த இடத்தில
மண்ணை நிரப்பி
விண்ணை தொடும் கட்டடம்
வியந்து பார்க்க வைத்ததே
யாரை சொல்வது குற்றம்?
கட்டிட உரிமையாளர்
நாங்கள் பொறுப்பல்ல
என்று சொல்ல?
யாரை சொல்வது குற்றம்?
கல்லையா? மண்ணையா?
கம்பியா? இல்லை அந்த
எரி மண்ணையா ?
கட்டிடம் கட்ட ஒப்புதல்
தந்தவர்கள்
ஒதுங்கி கொள்ள!
ஒதுங்க வந்தவர்கள்
உட்பட எத்தனை
பேர் என்றே தெரியவில்லையே?
4 நாள் கழித்தும்
உயிரோடு மீட்கப்படவர்களை
பார்த்ததில் சந்தோசமே!
கனவுகளோடும் எதிர்பார்புகளோடும்
இருந்தவர்கள் தாங்கள்
கட்டிய கட்டிடதிற்க்குல்லேயே
கல்லறையாவோம் என்று
நினைத்திருக்க மாட்டார்கள்
அரசாங்க அதிகாரிகளே!
கட்டிட வல்லுனர்களே!
விதிமுறை மீறிய
கட்டிடங்களுக்கு இறையவாது
அப்பாவி மக்களே !
இனியொரு விபத்து நடக்குமுன்னே!
விதிமுறைகளை பின்பற்றி
கட்டுங்களே!