உருவமா உள்ளமா

இளம் பருவங்கள் இருக்கும்
வரை இருந்திடும் உருவ அழகு

அதன் முடிவினில் மிஞ்சுவது
உள்ளத்தின் அழகு

உருவம் பார்த்து, இளம் பருவ
அழகில் மயங்கி முடிவெடுத்தால்
வாழ்க்கை துணையை

அது தூணாக இல்லாமல், உன்னை
துரு பிடிக்க செய்யலாம், ஒரு நாளில்

அனைத்தும் அறிந்து, ஆராய்ந்து
தேர்ந்தெடு தகுந்த துணையை,
வாழ்வின் அனுபவங்கள் இருந்திடும்
சுகமாய்

சுந்தர உருவங்கள், சுந்தர உள்ளங்களாய்
இருக்கும் என்று உறுதி இல்லை

சுவையான வாழ்வுக்கு வேண்டியது
சொத்தாக திகழ்ந்திடும் ஒரு உயிர்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (5-Jul-14, 4:55 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 133

மேலே