இரு விழி, இரு விழி கலந்தது

இரு விழி, இரு விழி கலந்தது
ஒரு மொழி, ஒரு மொழி பிறந்தது
அது காதல் மொழி....!

இனிமைகள், இனிமைகள்
பார்வையில் இருந்தது, அது
இனிப்பினை பொழிந்தது,

இதழ் மொழி, இதழ் மொழி இங்கு
தேவையில்லை
இதயங்கள் பறிமாறுது காதலின்
வார்த்தைகளை

காதலின் மொழி, தனி மொழி
காவலை மீறிய அதன் வழி, தனி வழி
கண்களில் களங்கம் இல்லை
காட்சியில் ஒரு பேதம் இல்லை

காதலர் சேர்ந்தால் சொர்க்கமே எல்லை
காலங்கள் வாழ்த்திடும் எந்த காதலையும்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (7-Jul-14, 10:10 am)
பார்வை : 121

மேலே