திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 11

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. பாடல் எண்: 11

குறிப்புரை :

ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார் என்றது மூடர் எனக் குறுகிநின்றது.

புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு மெய்யைப் பொய்யென்று மனங்கொள்ள மாட்டாமல் அதுவே தமது நிலைபெற்ற உருவாக நினைத்துத் துவராடையாலே,

உடம்பைச் சூழப்பட்ட புத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தம் மொய்க்கும்படி அவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடி வந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்,

பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர் பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளி இருக்கின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி வழிபடாதவர்களது நினைவு எவ்வாறிருக்கும் என்றால், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ போதமாயிருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-14, 8:21 pm)
பார்வை : 102

மேலே