அரசுபள்ளிகளில் தேர்ச்சி அதிகரிக்க

அரசு வேலைவாய்ப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்கினால் அரசுபள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.இதனால் தங்கள் கடமையை மறந்த சில அரசு பள்ளி ஆசிரியரை கேள்விகேட்கும் பெற்றோர் எண்ணிக்கை உயரும்.பெற்றார்களுக்கு பயந்தும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வால் உச்சாகமடைந்தும் ஆசிரியர்கள் தங்கள் திறம்பட செய்து மாணவர்களின் தேர்ச்சி விகித்தை உயர்த்துவர். மாணவர்கள் தங்களின் தாழ்வு மனப்பான்மையை மறந்து அரசு பள்ளிகளில் பயில்வதை பெருமையாக கருதி படிப்பில் கவனம் செலுத்துவர். அரசின் முன்னுரமை-ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் பெற்றோர்-வேற்றுமை மறந்த மாணவர்கள் இமூவரும் இனைந்தால் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தானாகவே அதிகரிக்கும். அரசுபணியில் அரசு பள்ளி மாணவர்கே முன்னுரமை அளித்தால் அரசுபள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து தேர்ச்சி விகிதமும் அதிகரிப்பதுடன் தனியார் பள்ளிகளின் கல்வி வியாபாரமும் குறையும்

எழுதியவர் : (7-Jul-14, 8:52 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 98

மேலே