மனிதனின் நிலை

இன்று இந்த
பூமி எப்படி!
முதலில் இதைப்படி!
நீதியை காப்பவர் நிலைப்பார் யார்!
அநீதியை ஏற்போர் தலைக்கிறார்!
பரபரப்பாய் சுழல்கிறார்
அவரவர் பணிநிரப்ப!
சிகரத்தையும் தொடுகிறார்
அவர் தம் புகழ்பரப்ப!
இயற்கையை ஏறெடுத்து பார்ப்பார் யார்....
செயற்கையோடு ஒன்றுகிறார்......
காற்று போக இடமில்லை
எங்கும் தொடராய் கட்டிடம்...
ஊற்று தோன்ற இடமில்லை
அங்கும் தோன்றுது வெற்றிடம்...
தரமற்ற பொருளால்
உரமற்று போகுது தலைமுறை...!
நிஜமற்ற வாழ்வில் உளையுற்று போகுது மனநிலை....!