வாழ்க்கை கற்றவை பற்றவை - கவிதைப்போட்டி

வீட்டினில் தொட்டில்!
மழலையின் சிரிப்பு!
நிறைந்தது மகிழ்ச்சி...

வளர்ந்ததும் சிறுவன்!
பள்ளியை நோக்கி!
கல்வியின் தேடல்...

சிறவர்கள் ஆட்டம்!
நண்பர்கள் கூட்டம்!
பள்ளியின் பருவம்....

அன்னையின் பாசம்!
தந்தையின் கல்வி!
விடியலின் தேடல்...

இளமையின் வசந்தம்!
பெண்களின் வாசம்!
கல்லுரி காலம்!

வீதியில் ஓட்டம்!
இலட்சியத் தேடல்!
வேலையின் நோக்கில்....

இதயத்தின் ஏக்கம்!
காதலின் மோகம்!
திருமண பந்தம்...

மலர்ந்தது குடும்பம்!
காமத்தின் துள்ளல்!
நிறைவினில் குழந்தை...

குடும்பத்தின் தேவை!
உற்றோரின் நன்மை!
பணத்தின் தேடல்...

வாழ்கையின் உச்சம்!
முதுமையின் ஆட்டம்!
கல்லறை நோக்கி....

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (13-Jul-14, 8:46 am)
பார்வை : 82

மேலே