கற்றவை பற்றவை

அன்பு நிறைந்தால்
மறையும் பிணக்கு !

இடுக்கண் என்றால்
சிரித்துப் பழகு !

தீயன பார்த்தால்
சட்டென விலகு !

வியாதி வந்தால்
வைத்தியர் அணுகு !

வயோதிக வாழ்வில்
முதியோர் தாங்கு !

பாதகம் கண்டால்
கொதித்துப் பொங்கு !

கர்மவினை நீங்கிட
தானம் வழங்கு !

நன்னெறி பயின்று
அதன்படி ஒழுகு !

பேராசைப் பிணியை
வேரோடு விலக்கு !

ஆற்றலைப் பெருக்கும்
விடாமுயற்சி அழகு !

தறிகெட்ட மனதை
கடிவாளமிட்டு அடக்கு !

நம்பிக்கை வானில்
விரிப்பாய் சிறகு !

ஆன்மிக நாட்டம்
அகற்றும் மனஅழுக்கு !

நல்லோர் பாதம்
தொட்டு வணங்கு !

உயர்வழி நடந்தால்
கொண்டாடும் உலகு !!

எழுதியவர் : ராஜ லட்சுமி (13-Jul-14, 10:30 pm)
பார்வை : 128

மேலே