கிராமத்து காதல்

ஏசலாம் ஏசிய பின்னும் கண்களால் பேசலாம்
ஈசலாம் ஈசிய பின்னும் அறியாத மாறி நடிக்கலாம்
கூசலாம் கூசிய பின்னும் கண்கசக்கி பார்க்கலாம்
கூச்சலால் கூட நாம் சொல்ல வந்ததை கூறலாம்
காசெல்லாம் ஒரு பொருட்டு இல்லை காலம் காலமாய்
நேசமே நம் காதலின் அஸ்திவாரம் கவலை இல்லை
ஊரு சனம் இதுபோல ஜோடி இல்லை என வாழ்த்தும் படி
சாதி சனம் எல்லாம் எதிர்த்தாலும் ஒருகை பார்க்கலாம்
காதல் நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையுடன்
நாம் நம் காதலை வளர்த்த படி வாழ்ந்து காட்டலாம்