எங்கே சென்றாயடி நீ
எழுத மனம் இருந்தும் ஏனோ எழுதாமல் நானிருந்தேன் ...
உயிரே ... உன் பிரிவால்
என் மனம் கொண்ட சோகம் தனை
எழுத மனம் இருந்தும் ஏனோ எழுதாமல் நானிருந்தேன் ...
ஒன்றாக இருந்தபோது அன்பாகத்தான் இருந்தோமோ ?
இல்லை தான் ......
என்றாலும் நீ என்னோடு இல்லாதபோது தான்
நீ தான் எனக்கு எல்லாமுமாய் இருந்திரிக்கின்றாய்
என்பதை நான் உணர்ந்தேன் ...
என்னவளே ... எனை விடுத்து எங்கே சென்றாயடி ...நீ ..

