கண்டதில்லை உன் போல் தேவதையை

பாவை அவளின் பார்வை பட்டு
பைத்தியமாய் நான் ஆனேன்...!
மங்கை அவளின் மதிமுகம் காண
மனதிற்குள்ளே நான் துடித்தேன்....!

மனதை திருடும் மாயை தனை
மடந்தை அவளும் கற்றாளோ?
பெண்ணிலவாய் வந்து எனை
பெருமை படச் செய்தாளோ?

கன்னி இவளை காணத் தான்
கண்ணிரண்டும் படைத்தானோ?
பெண்மைக்கு இலக்கணமாய்
பெண்ணவளை படைத்தானோ?

கண்ணிமைக்கும் பொழுதெல்லாம்
கண்மணியின் ஞாபகமே!..
கண் விழித்து நான் பார்த்தேன்
கண்டதெல்லாம் கனவுக்குள்ளே!

பாரதியும் காணவில்லை
பாவை இவள் பேரழகை!
கண்டிருந்தால் மறந்திருப்பான்
கவியதனை தான் எழுத!

வெண்ணிலவாய் வந்து வந்து
வேதனைகள் நீ கொடுத்தாய்!
பால் நிலவாய் வந்து வந்து
பாசமதை நீ படைத்தாய்!

தேனிலவாய் வந்து வந்து
தேடல் அதை நீ தந்தாய்!
தேவதையாய் வந்தல்லவோ
தேவைதனை நிறைவு செய்தாய்!

தேவதாசனும் வாழ்ந்திருப்பான்
தேவி உனை பார்த்திருந்தாள்!
தேசமெங்கும் கண்டதில்லை
தேவதையே உன் போல்!....

எழுதியவர் : தங்க மணிகண்டன் (20-Jul-14, 11:05 am)
பார்வை : 85

மேலே