பிறந்த குழந்தையின் ஏக்கம்

கண்கள்மூடி தவம் இருந்தேன்;
நானும் உன்னை கண்டிடவே!
இன்று நானும் இருப்பதுவே ;
உன்னில் என்பதை அறியலையே!

தவமும் இன்று முற்றிற்றே;
என்னை உன்னிடம் பிரித்ததுவே!
வலியில் நீயும் துடித்தாயே;
கண்டதும் எனைத்தான் அணைத்தாயே!

கண்டேன் நானும் தேவதையை;
மகிழ்ச்சியில் பேச வாயெடுத்தேன்!
பேச என்னால் முடியவில்லை ;
இயலாமையில் நானும் அழுதிட்டனே!

அழுகுரல் கேட்ட தேவதையும் ;
ஏதோ என்றோ பதறியதே!
அணைத்து கொண்ட தேவதையிடம் ;
அழுகை துறந்து நித்திரைக்கொண்டேன்!

இருப்பேன் மீண்டும் தவமொன்று;
கண்கள்மூடி கருவறையில்!
என்னை நீயும் சுமப்பாயா?
பேசும் வரமொன்று தருவாயா?

எழுதியவர் : நீலாவதி (27-Jul-14, 8:51 pm)
பார்வை : 115

மேலே